
இலங்கை முஸ்லிம்களின் இசைத்துறை சம்பந்தமாக அந்நிய இனத்தவரிடம் ஒரு மட்டமான அபிப்பிராயமே காணப்பட்டு வந்தது. இதற்குநாம் கடந்த காலங்களில் சந்தித்து வந்த பல காரசாரமான விமர்சனங்கள் நல்லதொரு எடுத்துக்காட்டாகும். அது மாத்திரமன்றி பலசந்தர்பங்களில் எமது இசைதுறை சம்பந்தமான பலவீனம் காரணமாக இழிவு படுத்தப்பட்டமையையும் யாராலும் மறுக்க முடியாதஉண்மையாகும். இந்த ஆல்பம் உருவான பின்னனியிலும் ஒரு மத குருவுடன் பொது நிகழ்வு ஒற்றின் போது இடம் பெற்ற கசப்பானகலந்துரையாடலும் விமரசனமுமே காரணமாகும். இதற்கு தரமான முறையில் பதிலடி கொடுக்கும் ஒரு உன்னத முயற்சியே மனிதம்.
இன்று எமது சமூகத்தில் இசை ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை காணலாம். எங்கு சென்றாலும் இந்திய திரைப்பட பாடல்களை,மேற்கத்தேய ஆங்கில பாடல்களை, சிங்கள பாடல்களை எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைபரவலாக காணலாம். பலர் அறியாமையினால் ஷிர்க்குக்கு இட்டுச்செல்லக் கூடிய பாடல்களை கூட சர்வசாதாரணமாகபாடிக்கொண்டிருப்பதையும் காணலாம். (உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளை தொழமாட்டேன்) இது போன்று பலஉதாரணங்களை கூறிக்கொண்டே செல்லலாம்.
சகோதரர் ரைஸான் Knowledge Box நிறுவனத்தாரின் அணுசரனையுடன், சகோதரர் ஸமீலின் இசையில் மிகவும் தரமான வரிளுடன்அனைவரையும் கவரும் விதத்தில் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இலங்கை முஸ்லிம்களும் இசைத்துறையில்சளைத்தவர் அல்ல என்பதை மிகவும் ஆண்டித்தரமாக இவ் இசை ஆல்பத்தின் ஊடாக நிறுபித்துள்ளார். பாடல் வரிகளின் ஆழமானகருத்துக்களும், இனிமையான குரல்களும் மனதோடு இலகுவாக ஒட்டிக்கொள்கின்றன. வெளியிடுவதற்கு முன் பாடல்களைசெவிமடுப்பதற்கான சந்தர்பத்தை தந்த சகோதரன் ரைஸான் மற்றும் ஸுபைல் அவர்களுக்கு எனது நன்றிகள். இது போன்ற ஒருஅற்புதமான படைப்பு விரைவில் வெளிவர எனது மனமார்ந்த நன்றிகள்.
" மனிதம் " இசை ஆல்பம் இலங்கை முஸ்லிம்களிம் இசைதுறையில் பாரியதொரு மாற்றத்தை உண்டுபண்ணுவதில் எந்த சந்தேகமும்இல்லை. இது போன்ற அற்புதமான படைப்புகளுக்கு ஆதரவளித்து இலங்கை முஸ்லிம்களுக்கான இசை துறையில் புதியதொருஅத்தியாயத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். அண்ணியரின் படைப்புகளில் மடிந்திருந்தது போதும். இதுவே எமதுஎதிர்காலத்தை வலுவாக வித்திட சிறந்த தருணம்.
ஹஸான் மூஸா
No comments:
Post a Comment