சகோதரி ரிஸானா அவர்களின் இன்றைய அஸ்தமணம் அவர் போன்ற மற்றும் பல சகோதரிகளின் ஒரு உதயமாகவே இருக்க வேண்டும். இந்த சம்பவம் எனது காதுகளை எட்டிய பொழுது என்னையே அறியாத ஒரு கவலையும் மற்றும் இனம் புறியாத ஒரு அழுகையும் படர்ந்திருப்பதை என்னால் இன்னும் உணர முடிகின்றது.
இணையத்தளங்களில் இது பற்றிய காரசாரமான விமர்சனங்களையும் இரு பக்கம் சார்ந்த வாக்குவாதங்களையும் எமது முஸ்லிம்கள் மத்தியிலேயே காணமுடிகின்றது. இஸ்லாமிய சட்ட அடிப்படையில் கொலை செய்தவருக்கு மரண தண்டனை என்ற அடிப்படையில் சகோதரி ரிஸானா அவர்களுக்கு இத்தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது. இவரது பக்கம் தகுந்த நியாயங்கள் இருப்பின் அவருக்கான மகத்துவம் மிக்கதொரு தீர்ப்பை இறுதிநாளில் வழங்குவதற்கு அல்லாஹ் மிகவும் போதுமானவன். அவர்களது பாவங்களை மன்னித்து சுவர்கத்தில் உயர்ந்ததொரு இடத்தை அடைவதற்கு நாமும் அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
சகோதரர்களே இந்த விடயத்தில் வீண்வாக்குவாதம் செய்து எமது நேரத்தை வீண் விரயம் செய்வது மாத்திரமன்றி சகோதரி ரிஸானா அவர்களுக்கு கலங்கம் விளைவிக்காது தவிர்ந்து நிற்போம். உண்மையில் பல சகோதரர்கள் கவலையின் காரணமாவும் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் பல்வேறுவித பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருகின்றனர்.
சகோதர்களே உங்களுக்கு உண்மையிலேயே அவர் மீது அன்பிருந்தால் இது போன்று மற்றும் பல ரிஸானாக்கள் எமது சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருகின்றனர். அது போன்ற குடும்களை இனம்கண்டு மீண்டுமொரு இது போன்ற துயர நிகழ்வு இடம்பெறாது இருக்க உதவி செய்வது எம் அனைவர் மீது கடமையாகும்.
பெயர், புகழ் மற்றும் சொந்த இலாபங்களை மாத்திரமே அடைந்து கொள்வதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு திரியும் எமது அரசியல் காடையர்களையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களின் பிரச்சினைகளின் போது ஓடி ஓழிந்து கொள்ளும் இந்த கொளையர்களே எமது இன்றைய அரசியல் பிரதிநிதிகள். இந்த சகோதரியின் பக்க நியாயங்களை எடுத்துறைபதற்கு இவர்கள் செய்தது என்ன?
இனிவரும் காலங்களிளாவது புத்திசாலிகளாக நடந்து கொள்ளுங்கள். பிரதேசவாதம், எமது சுயலநலம் போன்ற காரணங்களால் தகுதியற்ற தலைவர்களை தெரிந்து எடுப்பதற்கு நாமும் காரணம் ஆகின்றோம். அவர் தவறான காரியங்களை மேற்கொள்ளும் பொழுது அதற்காக நாமும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய குற்றவாளிகளாக நிற்பதற்கு நேரிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
சகோதர்களே வறுமையில் வாடும் எமது சொந்தங்களை இனம்கண்டு எம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வோம். அதுமாத்திரமன்றி ஸகாத் நிதியை பிரதேசவாதங்கள் இன்றி உதவிகள் மிகவும் அத்திவசியமானவர்களை இனம்கண்டு பகிர்ந்தளிப்போம்.
இதன் மூலம் பெண்கள் ஆண் துணையன்றி கடல் கடந்து வேலை செய்வதற்கு செல்லும் கொடூரமான நிலைமைகளை எமது சமுகத்திலிருந்து களைந்தெறிவோம். இதுவே நாம் சாகோதரி ரிஸானா அவர்கள் மீது நாம் கொண்டு அன்பிற்கு செய்யும் சிறந்த உபகாரமாகும்.
ஹஸான் மூஸா

No comments:
Post a Comment