இஸ்லாத்தின் வளர்ச்சி
பாலை மண்ணில் 1400 வருடங்களுக்கு முன் உலகமே
நேசிக்கும் ஒரு மாமனிதரால் கட்டியெழுப்பப்பட்ட
மார்க்கமே இஸ்லாம். இன்று முழு உலகுமே அண்ணார்ந்து பார்க்கும் ஒரு பாரிய சக்தியாய்
பறந்து விரிந்து காணப்படுகின்றது. இறை தூதர் அவர்கள் பறைசாற்றியது போன்று இஸ்லாத்தின்
வளர்ச்சி முழு உலகிலும் ஆதிக்கம் செலுத்தும் காலம், அதன் ஒளிகள் இன்று மிகவும்
பிரகாசமாய் தோன்றத் துவங்கியுள்ளன.
இஸ்லாத்தின் அதிவேக வளர்ச்சியே முஸ்லிகளுக்கு எதிராக அதிக
எதிரிகளையும் சக்திகளையும் உருவாக்கியுள்ளது. இன்று
முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் வலுபெருவதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய
வளர்ச்சியின் மீது அவர்கள் கொண்ட காழ்புணர்ச்சியாகும். அவர்களது இந்த பொறாமையே
முஸ்லிகளுக்கு எதிரான பிரச்சினைகளாக இன்று கிளைவிட்டு ஆல மரங்களாக வளர்ந்து
நிற்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின்
அவலம்
அண்மைகாலமாக இலங்கையில் முஸ்லிம்கள்
இனரீதியாக குறிவைத்து தாக்கப்படும் நிகழ்வுகள் முஸ்லிம்களை பெரிதும் அச்சம் கொள்ளச்
செய்துள்ளது, அத்துடன் இன்று அவர்களது
உள்ளங்களில் தமது இருப்புகள் பற்றிய ஒரு
கேள்வி குறியையும் தோன்றிவித்துள்ளது.
வரலாறு நெடுகிலும் அரசு
மற்றும் நாட்டின் விசுவாசிகளாய் வாழ்ந்து சரித்திரம் படைத்தவர்களே முஸ்லிம்கள். அன்றைய
அரசர்களின் வெற்றிகளின் வேர்களாகவும், நாட்டின் பொருளாதாரத்தின் தூண்களாகவும் இருந்து
வந்தமையை இன்றும் வரலாறு சான்று பகிர்கின்றது.
நாம் வடக்கிலிருந்து துறத்தப்பட்ட
பொழுதும், கிழக்கில் சிசு முதல் முதியோர்
வரை கொலைய செய்யப்பட்ட பொழுதும், எமது இருப்புகள் கேள்விக்குறியாக்கப்பட்ட
பொழுதும் நாட்டின் வளர்சியில் ஒரு படிக்கற்களாகவே முஸ்லிம் சமூகம் என்றும் துணை
நின்றமை யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இன்று இலங்கையில் முஸ்லிம்கள்
இனரீதியாக குறிவைத்து தாக்கப்படுவது ஒரு சர்வ சாதாரணமான விடயமாக நாடுதழுவிய
ரீதியில் பரவலாக இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவுகள் முஸ்லிம்களை அச்சம் கொள்ள
செய்துள்ளதுடன் தமது இருப்பு பற்றிய கேள்விக்குறியையும் தோற்றுவித்துள்ளது.
இலங்கையனாக இருந்தும் நாம் இலங்கையர்களா என்று எண்ணுவதற்கும் தோன்றுகின்றது.
மறந்து விடாதீர்கள் இன்று
நாம் அனுவித்துக் கொண்டிருக்கும் அபிலாஷைகள் எமது முன்னோர் பெற்றுத் தந்த
வரங்களாகும். நாம் உண்டுவிட்டு கொட்டாவி விடுபவர்களாக இருந்தால் வருங்கால
சந்ததியினர் கை நீட்டும் துர்பாக்கிய சாலிகளாக, குற்றவாளிக் கூண்டில் இருப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும்
இல்லை. இன்றைய நிகவுகளை உன்னிப்பாக அவதானிக்கும் பொழுது வருங்காலங்களில் .
·
முஸ்லிம்களது உரிமைகள்
தடுக்க படலாம்
·
பெண்களது ஹிஜாப் நிகாப்
போன்ற உரிமைகள் பறிக்கப்படலாம்.
·
புதிதாக மஸ்ஜிதுகள்
அமைப்பது கனவுகாளாக மாறாலாம்
·
மார்க்க விடயங்ககளை
நிறைவேற்றுவது நிறுத்தப்படலாம்
·
பலவந்தமாக எமது
சாகோதரர்கள் மதம் கூட மாற்றப்படலாம்.
·
முஸ்லிம்களது வியாரபார
நடவடிக்கைகள் முடக்கப்படலாம்.
·
அன்றாட கடமைகளை
சுதந்திரமாக நிறைவேற்றுவது கூட கடினமாக மாறலாம்.
இவை கற்பனைகளும் கனவுளும்
இல்லை வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள். இலங்கையிலும்
இதற்கான ஒரு ஆரம்ப கட்டமே இன்றைய களத்தில் இருக்கும் பௌத்த இனவாத அமைப்புகளும்
அவைகளது பணிகளும்.
·
இவ்வமைப்புகள்
பல தசாப்தங்களாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மற்றும் பௌத்த சகோதரர்கள் மத்தியில்
திடீர் விரிசள்களை தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பதன் காரணம் என்ன?
·
உண்மையில்
இதன் பின்னணியில் இருப்பது யார்?
·
இவர்களது
இலக்குகள் என்ன?
·
செயற்பாடுகள்
எவ்வாறானது?
போன்ற
கேள்விகளுக்கு விடைகாணும் ஒரு சிறிய முயற்சி உங்கள் பார்வைக்கு.
இலங்கையில்
பௌத்த இனவாத அமைப்புகளின் செயற்பாடுகள் அதிரிகரிப்பதற்கு பல சர்வதேச அமைப்புகள்
காரணாமாக இருக்கின்றமை இன்றும் எம்மில் பலருக்கு புலப்படாத உண்மைகளாகும். இது
சம்பந்தமாக சில பிரதான அரசியல்வாதிகளாளும், பல ஊடகங்களில் பேசப்பட்டாலும்
முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமை கவலைக்குறிய விடயமாகும்.
நாம்
மறந்துவிடக்கூடாத விடயம் முஸ்லிம்களுக்கு எதிராக பல சர்வதேச சக்திகள் இனவாத
அமைப்புகள் எமது வரலாற்றின் ஆரம்பம் தொட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகள்
இன்றைய தொழிநுட்பத்தின் அதித வளர்ச்சியின் காரணாமாக ஏனைய இஸ்லாமிய எதிர்ப்பு
அமைப்புகள் மற்றும் இனவாத சக்திகளுடன் சர்வதேச ரீதியில் தமது தொடர்புகளை வளர்த்துக்கொண்டு
வலைபின்னல்களாக செயற்பட ஆரம்பித்துள்ளன. ஏன்னெனில் இவர்களுக்கெதிரான பொது எதிரியாக
இஸ்லாத்தின் அதிவேகமான வளர்ச்சியும்
முஸ்லிம்கள் அல்லாதோரின் இஸ்லாதின்பாலான எண்ணிலடங்காத வருகையும் பிரதான காரணமாக
இருகின்றன.
சர்வதேச
இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்புகள், இனவாத அமைப்புகள் பற்றி இங்கு அதிகம் பேச விரும்பவில்லை.
காரணம் அவர்கள் பற்றிய பல தகவல்களை இணையத்தளங்களில் இலகுவாக பெற்று கொள்ளலாம். அது
மாத்திரமன்றி பல இஸ்லாமிய எதிர்ப்பு இணையத்தளங்கள், வீடியோக்கள், ஒளிப்பதிவுகள்,
திரிவுபடுத்தப்பட்ட பல இஸ்லாமிய தரவுகள் இதற்கு ஆதாரமாக நிறைந்து காணப்படுகின்றன.
இலங்கையில்
சர்தேச இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்புகளின் சில செயற்பாடுகள் உங்கள் அவதானத்திற்கு.
·
நோர்வே
நாட்டில் இடம்பெற்ற 77 நபர்களின்
கொலை சம்பவமும், இலங்கை முஸ்லிம்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற பட வேண்டும் என்ற
கொலையாளி அண்டேர்ஸ் பஹ்ரின் பிறேவிகின் கோரிக்கையும் குறிபிட்டு நோக்கத்தக்கது.
விடுதலை புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றிய விதத்தால் தான்
ஈர்கப்பட்டதாகவும் அதையே இலங்கை அரசும் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு பின்பற்ற
வேண்டும்மென குறிப்பிட்டதும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
·
இனவாத அமைப்புகளின் அங்கத்தவர்களுக்கு
சர்வதேச நாடுகளுடனான நெருங்கிய
தொடர்ப்புகள் இருக்கின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. .
·
இனவாத அமைப்புகளின் பிரதான உறுப்பினர்களது அமெரிக்கா நோர்வே போன்ற
நாடுகளுக்கான வெளிநாட்டு பயணம்கள் அவதானத்துக்குரிய அம்சங்கள் ஆகும்.
·
இனவாத அமைப்புகளின்
அலுவலகங்களுக்கு நோர்வே போன்ற நாடுகளின் வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்களின் வருகையும்
இனவாத அமைப்புகளுக்கான சர்வதேச அன்பளிப்புகளும் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் வெளிநாட்டு அமைப்புகளின்
பங்களிப்பை உறுதி செய்கின்றது.
மேற்கூறிய விடயங்களையும் இதனது பின்னணியை அவதானிக்கும்
பொழுது இது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சர்வதேச தீய சக்திகளின் வெளிப்பாடு என்பதை
தெளிவாக உணரலாம். இவர்கள் பௌத்தர்களை பொம்மைகளாக வைத்து தமது காய்களை
முஸ்லிகளுக்கு எதிராக நகர்த்த ஆரம்பித்துள்ளனர் என்பதே புரியப்படாத உண்மை.
இஸ்லாமிய எதிர்ப்பு யூத அமைப்புகள்
நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை விடயம் முஸ்லிம்களுக்கு
எதிரான சர்வதேச இரகசிய யூத அமைப்புக்களும் இலங்கையில் பல
நூற்றாண்டுகளாக செயற்பட்டுக் கொண்டிருகின்றன.
உலகில் அனைத்து துறைகளிலும் தனது ஆதிகத்தை செலுத்தி வரும்
இந்த அமைப்பால் வளர்ந்து வரும் இஸ்லாமிய சக்தியை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் முஸ்லிம்களை
சீர்குழைத்து தனது ஆதிக்கத்தை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு பல சூழ்சிகளை
செய்து பல நாடுகளிலும் நடைமுறை செய்துவருகின்றது இதற்கு ஈராக், பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், மியன்மார் போன்று நாடுகளையும் இன்று இலங்கையும் சிறந்த
உதாரணங்களாக கூறலாம்.
·
முஸ்லிம்களது ஒற்றுமையை சீர்குழைத்தல்
·
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை தமது சகாக்களாக மாற்றுதல்
·
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அவர்களுக்கு எதிராக பெருபான்மையின
மக்களை அமைப்புகளை தூண்டி விடுதல்.
·
இனவாத மத அமைப்புகளிடம் முஸ்லிம்களை கொடூரமான முறையில் சித்தரித்தல்.
·
முஸ்லிகளை முடக்குவதற்காக அந்நாட்டு அரசுகளுடன் உடன்படிக்கைகள் செய்து
கொள்ளுவதுடன் உதவிகளையும் வழங்குதல்.
·
முஸ்லிம்களது பிரச்சினைகளை தமது செல்வாக்கை கொண்டு ஊடகங்கள் ஊடக தனக்கு
சாதகமாகவும் உபயோகப்படுத்தி கொள்ளுதல் இதற்கு சிறந்த சான்று மேற்கத்திய சக்திகளால்
கொன்று குவிக்கப்பட்ட குழந்தைகள் பல்லாயிரம், அங்கவீனர்களாக்கப்பட்ட குழந்தைகள் பல
இலட்சம் இப்படியிருந்தும் இவைகளை பேசுவதற்கு யாரும் இல்லை. தலிபான்களால் சுடப்பட்ட
மலாலா எனும் பெண்ணுக்கு எத்தனை சலுகைகள் அவளது பெயரில் உயரிய விருதுகள்,
மரியாதைகள். இது தான் இவர்களின் இஸ்லாமிய குரோத செயற்பாடுகளின் உச்சகட்டம். .
அரசியல் காரணிகளும்
காய்நகர்த்தல்களும்
·
இலங்கையில் சீனாவின்
செல்வாக்கும் இந்தியாவின் அச்சமும்.
·
சீனாவின் இலங்கைக்கான
அரசியல் முன்னெடுப்புகளும் அமெரிக்காவின் காய்நகர்த்தல்களும்.
·
விடுதலை புலிகளின்
சர்வாதேச பிரேரணைகளும், அவற்றை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளும்.
·
பாகிஸ்தான் ஹிந்து
அமைப்புகளின் முக்கிய புள்ளிகளுக்கும் பௌத்த இனவாத அமைப்புகளுக்கும் இடையிலான
நெருங்கிய தொர்புகள்.
இது போன்ற அரசியல்
காரணிகளுக்காக சில தீய சக்திகள் இலங்கையில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கு
முயற்சி செய்து கொண்டிருகின்றன. இவை அனைத்தினதும் செயற்பாடுகளின் விளைவுளே இன்று
முஸ்லிம்களுக்கு எதிராக உருவெடுத்திருக்கும் பூதகரமான இனவாதமாகும்.
நாங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இது ஹாலால்,
ஹிஜாப், இறைச்சி கடை பிரச்சினைகளோ அல்ல இதற்கு பின் ஒரு பாரியதொரு நோக்கம் இலக்குடன்
கூடிய தீய சக்திகளின் பின்னணியை கொண்டுள்ளது. இன்று உலக அளவில் மிகவும் வேகமாக
வளர்ந்து வரும் சக்தியே இஸ்லாம் ஆகும். இஸ்லாத்தின் வளர்ச்சியை கில்லி எறிவதற்காக
பல சர்வதேச அமைப்புகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதற்காக நிரூபிக்க பட்ட பல சான்றுகள் ஊடகங்களிலும்
இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
இஸ்லாம் விரோத சர்வதேச அமைப்புகளின்
இலங்கைக்கான பிரசவம் தான் இன்று களத்தில் இருக்கும் பௌத்த இனவாத அமைப்புகள்.
பௌத்த இனவாத அமைப்புகளின்
செயற்பாடுகளை நன்கு அவதானிக்கும் பொழுது இவர்களது அனைத்து செயற்பாடுகளும் இஸ்லாமிய
எதிர்ப்பு நடவடிக்கைளாகவே புலப்படுகின்றது. இவர்களது இலக்கு பௌத்த சமூகத்தில்
சீர்திருத்தங்களை மேற்கொள்வதோ சமூக அக்கறையோ அல்ல. முஸ்லிம்களை வீழ்த்தி அவர்களது
உரிமைகளை ஒடுக்குவதேயாகும்.
ஹலால் உற்பத்திகளுக்கு
தடை, ஹிஜாப் நிகாப் போன்ற உடைகளுக்கு முற்றுபுள்ளி, இறைச்சி கடைகளுக்கு மூடுவிழா,
இஸ்லாமிய அமைப்புகளுக்கு தீவிரவாத பட்டம், ஒரு சில முஸ்லிம்கள் செய்யும்
தவறுகளுக்கு அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளில், முஸ்லிம்களது வியாபாரங்களுக்கு
இனவாத முத்திரை போலியான இட்டுக்கட்டப்பட்ட குற்றசாட்டுகள் என போற்றித் திரியும் இவ்வினவாத
அமைப்புகளுக்கு சந்திக்கு சந்தி நிறைந்திருக்கும் சாராயக் கடைகள், குட்டை பாவாடை
மற்றும் கவர்ச்சியான உடைகளுடன் சுற்றித் தெரியும் பெண்கள், விபச்சார மடங்கள் புலப்படவில்லை.
சர்வசாதாரணமாக நாளாந்தம் நிகழும் கொலைகள், கற்பழிப்புகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள்
இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. மோசடி செய்யும் தலைவர்கள் அரசியல்வாதிகள் தான்
இவர்கள் பெரிதாக கருதும் உத்தமர்கள்
அவர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை முஸ்லிம்களே நாட்டுக்கு பெரிய எதிரிகள் என்ற
மனோபக்குவமும், பௌத்த மதம், பௌத்தர்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை முஸ்லிம்களை
ஒடுக்கி பலவீனம் செய்தால் மாத்திரம் போதும் என்ற
மனோபாங்கும் இவர்களது கொடிய எண்ணம்
என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்வதற்கு சிறந்த சான்றுகளாகும்.
அரசாங்கத்தின் மௌனம்
இவர்களுக்கு பின் சர்வதேச சக்திகளும் அரசியல்வாதிகளும் இருப்பதை மென்மேலும்
உறுதிசெய்கின்றது.
இவர்களது முஸ்லிம்களுக்கு
எதிரான ஆரம்பகட்ட நடவடிக்கைகள்
·
அல் – குர்ஆன் ஹதீஸ்
வசனக்களை தீர்வு செய்து தவறான கண்ணோட்டத்தை பௌத்தர்களுக்கு அளித்தால்.
·
நபி (ஸல்) அவர்களது
வாழ்கையை தாழ்ந்த முறையில் சித்தரித்தல்.
·
இஸ்லாமிய எதிர்ப்பு
தகவல்களை சிங்கள மொழியில் திரட்டுதல்
·
முஸ்லிம்களுக்கு எதிரான
வலையத்தலங்களை சிங்கள மொழியில் மாற்றம் செய்தல்
·
முஸ்லிம்கள் பௌத்த புராதன
சின்னங்களை அழிப்பதாக குற்றம் சுமத்துதல்
·
முஸ்லிம்களது இனபெருக்க
விகிதத்தை காரணம் காட்டி எதிர்காலங்களில் இலங்கை முஸ்லிம் நாடாக மாறும் என
எச்சரிக்கை செய்தல்
·
முஸ்லிம்களுக்கு எதிரான
பௌத்த நபர்களை ஒன்று திரட்டுதல்
·
இவர்களை கொண்டு மேற்கூறிய
நச்சு கருத்துக்களை அப்பாவி பௌத்த மக்களிடம் கொண்டு செல்லுதல்.
இவர்களால் தமது
செயற்பாடுகளுக்கு இலக்கு வைக்கபடும் பௌத்தர்கள்.
·
இளைஞர்களே இவர்கள் இலக்கு
வைக்கும் மிகவும் பிரதான பிரிவினர்
·
பல்கலைகழக மாணவர்கள்
·
தகம் பாசல் சிறுவர்கள்
·
பிக்குகள்
·
பௌத்த வியாபாரிகள்
·
கல்விமான்கள்
·
இனவாத அரசியல்வாதிகள் போன்றோருக்குகான
நச்சுக் கருத்துகளுடன் கூடிய இனவாத மூளைச்சளவை செய்து முஸ்லிம்களுக்கு எதிராக
ஏவிவிடல்.
இவர்களது இரண்டாம் கட்ட
நடவடிக்கைகள்
·
தமது செயற்பாடுகளை நாடு
தழுவிய ரீதியில் வியாபித்தல்
·
பிராந்திய அலுவலகங்களை
ஆரம்பித்தல்
·
முஸ்லிம்களுக்கு எதிரான
பிரசார நடவடிக்கைகளை பகிரங்கமாக செய்தல்.
·
முஸ்லிம்களுக்கு எதிரான
நாடகங்களை அரங்கேற்றல்
·
முஸ்லிம்களது உரிமைகளை
முடக்க முயற்சி செய்தல் (ஹலால், ஹிஜாப்)
·
ஊடகத்தினரின் பார்வையை
தனது பக்கம் இழுத்தல்.
·
வியாபார நடவடிக்கைகளை
முடக்க முயச்சி செய்தல்
·
அரசியல் ரீதியாக தமக்கான
அங்கீகாரத்தை பெறல்
இவர்களது மூன்றாம் கட்ட
நடவடிக்கைகள் முஸ்லிம்கள் மிகவும் பயங்கரமாக எதிர் நோக்கவுள்ள பிரச்சினைகளாகும்.
இவற்றுக்கான ஒரு அடித்தாளம் தான் மேற் கூறிய விடயங்கள்.
·
முஸ்லிம்களது
வியாபாரங்கள் அழிக்க படலாம்
·
83 போன்றதொரு கலவரம் ஊடாக
அதிகமானோர் கொலை செய்யப்பட்டு முஸ்லிம்களது வியாபாரங்கள் சொத்துக்கள்
கொல்லையிடப்படலாம்.
·
சமூக ஒற்றுமை சீர்
குழைக்க பட்டு எமது சமூகம் சின்னா பின்னமாக்கபடலாம்
·
அரசியல் ரீதியாக
அனாதைகளாக்க படலாம் (தற்போதும் அரசியல் ரீதியாக எமது சுயநல விலைமதிப்புள்ள
அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட சமூகம்)
·
ஊடாக ரீதியாக முற்றாக
ஒடுக்கப்படல்.
·
இஸ்லாமிய மத விழுமியங்களை
பின்பற்றுவதற்கு கடுமையான கட்டுக்கோப்புகளை கொண்டு வருதல்.
·
மதம் மாறுவதற்கான
நிருபந்தத்தை ஏற்படுத்தல் அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்தல்
·
அவர்களாகவே குற்றம்
புரிந்து பலிகள் முஸ்லிம்கள் மீது சுமத்தப்படுதல்.
இவர்களது
செயற்பாடுகளை அவதானிக்கும் அனைவரும் இலகுவாக புரிந்து கொள்ளும் ஒரு விடயம்
அவர்களது அனைத்து விடயங்களும் முஸ்லிம்களை சீண்டுவதாவே இருக்கிறது.
அதுமாத்திரமன்றி அவர்களது நடவடிக்கைகள் பௌத்த விழுமியங்களுக்கு முற்றிலும் முரணான
ஒரு போக்கை கொண்டது.
·
போலியான
தகவல்களை கொண்டு பௌத்த மக்களை முஸ்லிம்கள் மீது தூண்டி விடுதல்.
·
இழிவான
வழி முறைகளில் பிரச்சார நடவடிக்களை மேற்கொள்ளுதல், அதாவது முஸ்லிகள் செறிவாக
வாழும் பிரதேசங்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு
அவர்களது உள்ளங்களை வேதனை கொள்ளச் செய்தல். உணர்சிகளை தூண்டி விடுதல்.
·
மிகவும்
கேவலாமான முறையில் அதன் பிரதானிகள் நடந்து கொள்ளுதல். முஸ்லிம்களுக்கு எதிராக
போலியான நாடகங்களை முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றம் செய்தல்.
·
தமக்கு
சாதமான விடங்களை கொண்டு பெரும்பான்மையின மக்களை முஸ்லிகளுக்கு எதிராக திசை
திருப்புதல். சனத்தொகை வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி விடங்களை கொண்டு அச்சம்
கொள்ள செய்தல்.
·
இஸ்லாம்
பற்றிய திரிவு செய்யப்பட்ட விடயங்களை கொண்டு இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை
அவர்கள் மத்தியில் கொண்டு செல்லுதல்.
இவர்களது செயற்பாடுகளை சிறந்த முறையில் நடைமுறை
செய்பவர்களாக இருந்தால் அவர்களது வழிமுறை மரியாதைக்குரியதாக இருக்கும். ஆனால்
இங்கு தெளிவாக தெரிகின்றது இது ஒரு முஸ்லிகளுக்கு எதிரான பௌத்த சமூகத்தை கேடயமாக
கொண்ட ஒரு அமைப்பு.
இவர்களால்
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்
பள்ளிகளுக்கு எதிரான
தாக்குதல்கள்
·
20/05/2010 ஒரு குழுவினரால்
மெல்சிறிபுர, அம்பன்போல நூரானியா மஸ்ஜித் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.
·
01/09/2011 300 வருடங்கள் பழமையான
அனுராதபுர ஒட்டுபள்ளம் சியாரம் முற்றாக தகர்க்கப்பட்டது
·
19/04/2012 தம்புள்ள ஹைரியா மஸ்ஜித்
நடு இரவு நேரத்தில் பெற்றோல் பாம் வீசப்பட்டு தாக்கப்பட்டது
·
20/04/2012 ரங்கிரி தம்புள்ள விகாரை
பீடாதிபதியின் தலைமையில் தம்புள்ள ஹைரியா மஸ்ஜிதை அகற்ற கோரி ஆர்பாட்டம்
செய்யப்படல். இந்த சம்பவத்தில் பிக்குகளால் மஸ்ஜித் சேதமாக்கபட்டது.
·
25/05/2012 தெஹிவளை கல்விகாரை
மஸ்ஜித் ஐ அகற்ற கோரி இனவாதிகளால் ஆர்பாட்டம் செய்யபட்டது. ஆர்பாத்தின் பொழுது
மஸ்ஜித் கற்காளால் எறியப்பட்டு சேதமாக்கபட்டன.
·
28/05/2012 குருநாகல் உமர் கத்தாப்
மதரசா 5 வேலை தொழுகையை நிறுத்த கோரி பிக்குகளால் நிர்பந்திக்க
பட்டது.
·
28/05/2012 குருநாகல் வெல்லவ அல்
அர்கம் குரான் மதரசாவை அகற்றுமாறு கோரி 150 பிக்குகளால் ஆர்பாட்டம்
செய்யப்பட்டது.
·
28/07/2012 ராஜகிரிய ஒப்செகரபுற
மஸ்ஜிதை அகற்றுமாறு பிக்குகள் கோரிக்கையிட்டனர்.
·
30/08/2012
·
கோகிலவத்தை
வெல்லம்பிட்டிய மஸ்ஜித் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.
·
27/10/2012 அனுராதபுர மல்வத்து ஓயா
மஸ்ஜித் பெருநாள் தினம் இனம் பெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது.
·
19/10/2013 மகியங்கனை மஸ்ஜிதின்
அன்றாட நடவடிக்கைகள் அரசியல்வாதியின் தலையீட்டால் இடை நிறுத்தப்பட்டது
முஸ்லிகளுக்கு எதிரான இனக்கலவரங்கள்
·
03/09/2011 திக்வெல்லை பிரதேசத்தில் ஏற்ப்பட்ட கலவரத்தில் சில வீடுகள்
சேதமாக்கப்பட்டன
·
31/10/2013 பலபிடிய நகரில் ஒரு திருட்டு சம்வத்தில் ஏற்பட்ட தகராறு முழு முஸ்லிம்கள்
மீது குற்றம் சுமத்தப்பட்டு ஒரு இனக் கலவரமாக மாற்றப்பட்டது.
முஸ்லிகளுக்கு எதிரான அச்சுறுத்தல் கடிதங்கள்
·
13/05/2012 தம்புள்ள பிரதேச
முஸ்லிகள் தமது இருப்பிடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் கடிதங்கள்
பகிரப்பட்டன.
முஸ்லிகளுக்கு எதிரான போலியான நாடகங்கள்
·
22/11/2012 ஒரு கடை உரிமையாளர் புத்தரது உருவம் தரிக்கப்பட்ட கையுறை விற்பனை செய்ததாக
குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்பு இது பௌத்த பிக்குகளால்
திட்டமிடப்பட்ட நாடகம் என நிரூபனமானதை நாம் அனைவரும் அறிவோம்.
முஸ்லிகளுக்கு எதிரான ஆர்பாட்டங்கள்
·
19//01/2013 NO
LIMIT நிறுவனத்துக்கு எதிராக அதன் மகரகம கிளையின் முன்பு
பிக்குகளால் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
·
24/01/2012 குளியாபிடிய நகரில் முஸ்லிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டது.
இதன் பொது பன்றி போன்ற உருவத்தின் மீது அல்லாஹ் என எழுதப்பட்டு எரிக்கப்பட்டது.
தாக்கப்பட்ட முஸ்லிம்களது வியாபார
நிலையங்கள்
·
இலங்கையில் மிகவும் பிரசித்தமான பேஷன்பங் வியாபார நிலையம் பொலிஸ்
பாதுகாப்புடன் பௌத்த பிக்குகளால் பகிரங்கமாக தாக்கப்பட்டது.
இவை அனைத்தும் நாம் எதிர்
கொண்ட பிரச்சினைகளின் ஒரு துளியே.
எமது பலவீனங்களும் பிரச்சினைகளுக்கான காரணங்களும்
·
ஒற்றுமையின்மை, சுயநலம்
மற்றும் பொறாமை
·
செயற்பாடுகளில் இஸ்லாம்
கூறும் வழிமுறையின்மை
·
ஊடக துறையில்
பிந்தங்கியுள்ளமை
·
அரசியல் துறையில்
பலவீனமும், சுயநல அரசியவாதிகளும் (முற்றாக களையப்பட வேண்டும்)
·
அறிவுத்துறையில் வீழ்ச்சி
·
மார்க்கம் பற்றிய தெளிவு
இன்மை
·
இளைஞர்களின் பணமோகம்
நாங்கள் அல்-குர்ஆன் வழியில்
நபிகளார் வாழ்ந்து காட்டிய முஸ்லிம்களாக வாழ்ந்து எமது சமூகத்தின் வெற்றியிலும்
வளர்ச்சியிலும் ஒவ்வொருவரும் பங்குதாளிகளாக மாறாதவரை இதுபோன்ற சவால்களுக்கு
முகம்கொடுப்பது தவிர்க்க முடியாத விடயமாகும்.
ஆக்கம் : முஹம்மத் ஹஸான்

No comments:
Post a Comment