Sunday, April 15, 2012

ඉස්ලාමි දහම


ඉස්ලාමි දහම ඉතාම පහසු මෙලොව හා එළොව ජය ගැනීමට මගපෙන්වන එකම දහමකි. ඒ ගැන නිසි අවබෝධයක් නැති කම නිසා වෙන්ම අද අප ඉස්ලාමි දහම බරක් කරගන ඇත.
පිටත සිට පිටස්තරව නොබලා ඉස්ලාමය පවසන පොඩි දෙයක් වුවද හොද දැනීමකින් හා අවබෝධයකින් කිරීමෙන්, එය අප හට වටහා ගත හැක.

තවද කවුරුන් විශ්වාස කර (අපි කියූ ආකාරයට) හොඳ ක්‍රියාවන් කරන්නේද, ඔහුට (දෙවියන්ගේ සන්නිධානයෙහි)අලංකාරවත්(හොඳ) ඵලවිපාක ඇත්තේය. අපිත් අපගේ ක්‍රියාවන්හි ඉතාමත් ලෙහෙසු ක්‍රියාවන් කිරීමට ඔවුන්ට අණ කරන්නෙමු තවද කවුරුන් විශ්වාස කර (අපි කියූ ආකාරයට) හොඳ ක්‍රියාවන් කරන්නේද, ඔහුට (දෙවියන්ගේ සන්නිධානයෙහි)අලංකාරවත්(හොඳ) ඵලවිපාක ඇත්තේය. අපිත් අපගේ ක්‍රියාවන්හි ඉතාමත් ලෙහෙසු ක්‍රියාවන් කිරීමට ඔවුන්ට අණ කරන්නෙමු(18:88)

මුහම්මදු හසාන්

ஆர்பாட்டங்கள், பகிஷ்கரிப்புகள் ஆரோக்கியமானதா???


அழகிய மலைகள், காடுகள், கனிமவளம், நீர் வளம், கடல் வளம் என அனைத்துவித இயற்கை எழில்களையும் பெற்ற பூலோக சுவர்கம் என வர்ணிக்கபடும் ஒரு அழிகிய அற்புதமான தீவு எமது இலங்கை ஆகும். எமது வளங்களை உற்று நோக்கினால் பல நாடுகளுக்கு ஈடு இணையற்ற அதிகமான பொக்கிஷங்களை நாம் கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள், பொருளாதார முன்னகர்வுகளை அவதானிக்கும் பொழுது பாரியதொரு அபாய விளைவுகளை நாம் எதிர்நோக்கியிருப்பதை காணலாம். இந்த கட்டுரையின் நோக்கம் அரசாங்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதோ, எதிர்கட்சிகளை விமர்சிப்பதோ, குற்றம் சாற்றுவதோ அல்ல மாறாக எமது நாட்டின் அண்மைகால நிகழ்வுகளை உற்று நோக்குகின்ற பொழுது நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய பல கசப்பான உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்கான ஒரு சிறிய முயற்சியே ஆகும்.

கடந்த இரண்டு தசாப்த்தங்களாக அரசியல் ரீதியான ஆர்பாட்டங்கள், வேலை பகிஷ்கரிப்புகள் நாடு தழுவியரீதியில் நடைபெற்று வருவதை காணலாம். இருப்பினும் கடந்த சில வருடங்களாக இவ்வாறான போராட்டங்கள், பகிஷ்கரிப்புகள் ஒரு தீவிர நிலையை அடைந்துள்ளமை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்

இதற்கான காரணங்களை சற்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது மிகவும் அற்பமான, இலட்சியமற்ற பின்னனிகளை கொண்டுள்ளன. அரசியல் ரீதியானஆர்பாட்டங்கள், தொழிற்சங்களின் வேலை பகிஷ்கரிப்பு, அரசாங்க ஊழியர்களின் போராட்டங்கள், பகிஷ்கரிப்புகள், மாணவர்களது போராட்டங்கள் என கூறிக்கொண்டே போகலாம். இவ்வாரான அனைத்துவித போராடங்கள் பகிஷ்கரிப்புகளிலும் ஒரு சில விசமிகளின் பின்னனியில் நிற்பது பொதுமக்கள் ஆகிய நாமே ஆகும்

பிரச்சினைகளுக்கான தீர்வுகள் போராட்டங்களும், பகிஷ்கரிப்புகளும் மாத்திரமா? இன்று அரசியல் சக்திகளின் ஒரு முக்கிய கேடயமாக இந்த போராடங்களும் பகிஷ்கரிப்புகளும் மாத்திரமே காணப்படுவது கவலைக்குறிய அம்சாகும். போராடங்கள் தவரானது அல்ல ஆனாலும் அனைத்து விடயங்களுக்கும் தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியதும் அல்ல இதன் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு  முன்மாதிரியாக இருக்க வேண்டிய இன்றைய எமது அரசியல் வாதிகளின் நிலை என்ன? அவர்களின் பின்னால் குடைபிடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? இன்றைய காலகட்டத்தில் அரசியல் என்பது ஒரு சமூக மாற்றத்தின் ஒரு இன்றியமையாத சக்தியாகும். இந்தஅரசியல் சக்திகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகள் இன்று எவ்வகையிலானது? அந்த அரசியல் சக்திகள் பொதுமக்களை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ளல் வேண்டும்.

உலக வரலாறுகளை அலசி ஆராய்ந்து பார்கின்ற பொழுது பொது மக்களுக்காக பல  தியாகங்களை செய்த சமூக மேன்படுகளுக்காக தமது வாழ்க்கையே அர்பணித்த பல நல்ல உள்ளங்களை, தலைவர்களை வரலாறு நெடுகிலும் நாம் கொண்டிருந்தோம். இது போன்று இலங்கையிலும் பல தசாத்தங்களுக்கு முன் எமது சுதந்திரத்துக்காவும் நாட்டின் பல அபிவிருத்தி  பணிகளுக்காகவும் அயராது உழைத்த பல தலைவர்களை நாம் கொண்டிருந்தோம்.

சரி சுற்றி வளைக்காமல் விடயத்துக்கு வருவோம் கடந்த சில வருடங்களாக  எமது அரசியல் மக்கள் நலன் போன்ற அடிப்படை அம்சங்களில் இருந்து விலகி ஒரு தனி சக்தியாக பயணித்துக் கொண்டிருகின்றது. அதாவது ஒருஅரசியல்வாதி என்பவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு, எம்மை அரசாங்க விடயங்களில்  முன்னிறுத்தும் ஒரு பிரதிநிதி. இன்று இவர்களுக்கும் எமக்கும் இடையிலான தொடர்ப்பு எவ்வகையிலானது? அவர்களை தொடர்பு கொள்வதற்கானவழிமுறைகள் என்ன? இவர்கள் தேர்தல்களுக்காக எவ்வாறு தெரிவு செய்யபடுகின்றனர்? அனைத்தும் கேள்வி குறிகளே அன்றிவேறில்லை.

எமது பிரதி நிதிகள் என்ற ரீதியில் அவர்களது வருங்கால சந்ததியினருக்கான முன்ணுதாரணங்கள் எவ்வாறானது?? அவர்களது சேவைகள் சமுகத்தில் எவ்வாரான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுது எமது அவல நிலை நன்குபுலப்படும். மக்களுக்காக குரல் கொடுக்கும் சேவை உள்ளம் கொண்ட அரசியல்வாதிகள் இன்றுஎங்கே?

தொழிற்சங்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களின் வேலை பகிஷ்கரிப்புகளால் பதிக்கப்படுவதும், இழப்புகளுக்கு முகம் கொடுப்பதும் இதன் பின்னனியில் இருக்கும் பொதுமக்களாகிய நாமே அன்றி வேறு யாரும் இல்லை. வைத்தியர்கள் வேலை பகிஷ்கரிப்புகளை மேற்கொண்டால் அதன் பாதிப்பு எவ்வாறானது? பாதிக்கப்படுவது எமது சகோதரர்களில் யாரோ ஒருவரே அன்றி வேறு யாரும் இல்லை. ஆசிரியர்களின் போராடங்களால் மாணவர்களது பொன்னான நேரம்வீணாக்கப் படவில்லையா? போக்குவர்த்து சங்கங்களின் வேலை பகிஷ்கரிப்பால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான இழப்புகள் பாரதூரமானதாக தெரியவில்லையா?

இவ்வாரான செயற்பாடுகளால் பாதிக்கபடுவது எமது நாட்டின் அபிவிருத்தியும் வருங்கால சந்ததியினரின் எதிர்காலமும் மாத்திரமே ஆகும். இவ்வாறான நிகழ்கவுளால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், மக்கள் நலன்கள் கருத்திற் கொள்ளப்படாமை மிகவும் கவலைக்குறிய விடயமாகும். இவ்வாரான ஆர்பாட்டங்களை மேற்கொள்ளும் போது தூர நோக்கின்றி பின்விளைவுகள் பற்றிய எந்தவித கரிசணையும் இன்றி இருப்பதை சர்வ சாதரணமாக நாம் காணாலாம். இதன் விளைவுகளாகவே இந்த போராடங்கள் இன்று கழவரமாக உயிர இழப்புகள் வரை சென்று கொண்டிருக்கின்றன.

அதுமாத்திரமன்றி எமது நாட்டை பல்லாயிரக்கணக்கான சுற்று பயணிகள் தரசிகின்றனர், நாம் பொது இடங்களில் மேற்கொள்ளும் இது போன்ற போராட்டங்கள் அவர்களது உள்ளங்களில் எவ்வாரான எண்ணங்களை தோற்றுவிக்கும் என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சற்று சிந்தித்து பாருங்கள் இந்த அழகிய தீவில் நாம் கொண்டிருக்கும் வளங்களை பயன்படுத்த  தெரியாதவர்களாக, குருடர்கள் போன்று வாழ்ந்து கொண்டிருகின்றோம், அன்றைய சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் இன்றைய நிலை என்ன??

அனைத்து வித வளங்களை கொண்டுள்ள எமது அவல நிலை என்ன? இயற்கை வளம் குறைவாக இருந்தாலும் நல்ல மனிதவளம் இருந்தால், குறைவான இயற்கை வளத்தைக் கொண்டே நிறைவான முன்னேற்றத்தைப் பெறமுடியும். இதற்கு நல்ல முன் உதாரணம் ஜப்பான் நாடு. திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள், எல்லாவற்றுக்கும் மேலாக தேசப்பற்று மிக்கவர்கள், இந்தத் தகுதி உள்ள ஜப்பானியர் களால் சாதிக்க முடிந்தது.

வைத்தியதுறையில் வளர்ச்சி கண்டுவிட்டோம், போக்குவர்த்து துறையில் விருத்தியடைந்துவிட்டோம், கணணி மற்றும் தொழிநுட்ப துறைகளில் வள்ளவர்கள் எனபீற்றித்திரியும் எமது கண்களுக்கு எந்தவித மருத்துவ வசதியும் அற்ற கிராமங்கள், கணணி பற்றிய எவ்விதஅறிவும் அற்ற குழந்தைகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் அற்ற பல நூறு  கிராமங்கள், போக்குவரத்து வசதிகளுக்காக அவதியுறும் மக்கள் புலப்படாமை கவலைக்குரிய  விடயமாகும்.

இன்று அண்ணிய நாடுகள் 30000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள மக்கள் மாவு அரைதார்களா இல்லையா என்ற அளவில் ஆய்வுகள் ஆராய்சிகள் செய்து கொண்டிருகின்றனர். கல்வித்துறையில் எமது வளர்ச்சி என்ன? இன்னும் அண்ணிய நாடுகளின் கண்டுபிடிப்புகளிலே தங்கி இருகின்றோம்

எமது அல்லுறும் மக்களை, சாதிக்கும் திறன் இருந்தும் வசதியின்றி வாழிகாட்டல் இன்றி தவிக்கும் குழந்தகளை பற்றி ஆராய்வதற்கும் யாரும் இல்லை. இவர்களுக்கான அடிபடை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஆர்பாட்டங்கள் எங்கே? இவ்வாரான விடயங்களுக்காக எமது நாட்டையும் வளம்பெற்ற நாடாக மாற்றுவதற்கு அவரகள்து உரிமைகளை பெற்று கொடுப்பதற்கு முயற்சித்தால் அதில் ஒரு நியாம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு குறை கூருவதில் எந்ந பயனும் இல்லை. நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யாமையும், அதற்கான சந்ததிகளை உருவாக்காத பொது மக்கள ஆகிய நாமே  குற்றவாளிகள் ஆவோம்.

தற்போதைய போராடங்கள், ஆர்பாட்டங்கள், வேலை பகிஷ்கரிப்புகள் எமக்கு அதிக இழப்புகளை  ஏற்படுத்துவதாகவே இருகின்றன. இந்த நிலை மாற வேண்டும் நாம் எதிர்கால நலன் கருதி பல புதிய  திட்டங்களுக்காக முயற்சிக்க வேண்டும். இலங்கைக்கு நல்ல வருவாயை பெற்று தந்த இறப்பர், தேயிலை போன்ற பெருந்தோட்ட பயிர் செய்கையை அன்று ஆங்கிலேயர் உருவாக்கவில்லையா? ஏன் நம்மால் ஒரு மாற்றத்தை நோக்கி சிந்திக்க முடியாது? அனைத்துவித இயற்கை வளங்களையும் கொண்ட எம்மால் ஏன் இன்னும் இது போன்ற புதிய திட்டங்ளை உருவாக்க முடியாது உள்ளது? கடந்தகாலங்களில் இது போன்ற எவ்வித திட்டங்களும் நாட்டின் எதிர்காலம் கருதி எமது அரசாங்களால் நடைமுறைபடுத்தாமை மிகவும் கவலைக்குறிய அம்சமாகும்.

அனைத்து விடயங்களையும் எதிர்மாறாக சிந்திக்கமால் நல்ல நோக்குடன் சிந்திதால் நாமும் சாதிக்கலாம். தடைகளைக்கு முற்றுபுள்ளியாய் இருந்து மடிவதை விட கால்புள்ளிகளாய் இருந்துசாதித்து காட்டுவோம்.

ஹஸான் மூஸா

அலட்சியம் வேண்டாம் சிந்தித்து செயல்படுவோம்.


அலட்சியம் வேண்டாம் சிந்தித்து செயல்படுவோம்.


இன்றைய கால கட்டத்தில் அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தின் இன்றியமையாத தேவையாகும். உலகஅரசியல், இஸ்லாமிய அரசியல் என்று பீற்றிக்கொண்டு சொந்த வீட்டுக்குல் சோம்பேரிகளாக தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு அவல நிலையிலேயே இலங்கை முஸ்லிம்களின் அரசியல் காணபடுகின்றது. ஒரு நாட்டின்சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் எமது உடமைகளையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கானஇலகுவான மற்றும் பலமான கேடயம் எமது அரசியல் அமைப்பாகும். நாம் எமது பிந்திய வரலாறுகளை, பெற்றுக்கொண்ட பெறுபேருகளை உன்னிப்பாக அவதானித்தால் எமது சமூகத்தின் இன்றைய பாதாள யாத்திரை நன்குபுலப்படும்.

எமது அலட்சியத்தாலும், அக்கறையின்மையாலும் பல அரசியல் அபிலாஷைகளை இழந்து முஸ்லிம் சமூகம்அநாதையாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. சுய நல அரசியல்வதிகளின் மாயவலைக்குல் சிக்குண்டு மடிந்துகொண்டிருக்கும் முஸ்லிம்கள் விழித்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய காலகட்டம் இதுவாகும். இன்றையஇலங்கை முஸ்லிம்களின் அரசியல் அற்பமான பேராசைகளுக்காக, இன்பமூட்டப்பட்ட பேச்சுக்களால்,பிரதேசவாதங்களால் ஒடுக்கப்பட்டுள்ளமை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இன்று இலங்கையில் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பலதிட்டமிடப்பட்ட ஒடுக்கு முறைகளை, பிரசாரங்களை சில இனவாத குழுக்கள் முடக்கிவிட்டு மிகவும் தீவிரமாகசெயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களிடம் வியாபார கொடுக்கள் வாங்களை பகிஷ்கறித்தல், இஸ்லாம்பற்றிய போலியான அபிப்பிராயங்ளை மாற்று மதத்தவர் மத்தியில் பரப்புதல், திட்டம்தீட்டி முஸ்லிம்களின்ஒற்றுமையை குழைத்தல், அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்துதல், அல் குர் ஆன் வசனங்களை திரிபுபடுத்திபிரசாரங்களை மேற்கொள்ளுதல் என வேகமாக பயணித்துக் கொண்டிருகின்றனர். இற்செயற்படுகளால் இஸ்லாம்பற்றிய தெளிவற்ற முஸ்லிம் சகோதரர்கள் கூட மனதளவில் பலவீனமடைந்து போகக்கூடியதை இன்று வெகுவாககாணமுடிகின்றது. எமது அலட்சியங்களால் முஸ்லிம் சமூகம் குருடாக திசையின்றி, இலக்கின்றிசிதறிக்கொண்டிருப்பதை நாம் உணரலாம். இந்த விடயங்களை அலசி ஆராயும் போது கல்வி, அரசியல்,பொருளாதாரம் போன்ற பல கோணங்களில் நோக்கலாம்.

இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு பிரதான விடயம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஒடுக்கு முறைகளாகும். கடந்த காலங்களில் பல விடயங்களில் எமது அபிலாஷைகளைஇழந்தும், அரசாங்க ஒதுக்கீடுகளில் இருந்து புரக்கணிக்கப்பட்டும், சில அத்தியவசியமற்ற இஸ்லாத்துக்கு முரணான விடயங்கள் எம்மீது திணிக்கப்பட்டமையும் நாம் கடந்த காலங்களில் எமதுகண்களூடாக கண்டவைகளே ஆகும். கடந்த மாதங்களில் நடைபெற்ற SLAS பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டோரில் முஸ்லிகள் புரகணிக்கப்பட்டதும் சிறந்த உதாரணங்களாகும்.

இவ் விடயங்களை மென்மேலும் அலட்சியம் செய்வது எம்மையே நாம் பாரிய விளைவுளுக்கு இட்டுச் செல்லக்கூடிய அறிகுறிகளை எம்மால் கண்டுகொள்ள கூடியதாக உள்ளது. டி.பி. ஜாயா,டாக்டர். கலீல், பதுர்தீன் மஹ்மூத், ராஷிக் பரீத் மற்றும் அஷ்ரப் போன்ற முஸ்லிம்களுக்காக எப்போதும் குரல் கொடுத்த அரசியல்வாதிகளை கொண்டிருந்த எமது தற்போதய நிலை என்ன??கடந்த கால தேர்தல்களில் நாம் கற்றுக் கொண்ட படிபினைகள் என்ன?? முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு முன்வந்து குரல் கொடுக்க கூடிய தற்போதைய அரசியல்வாதிகள் யார்????

கடந்த ஒரு தசாப்த்த கால தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டாலும், முஸ்லிம்களின் அபிலாஷைகளைஅரசியல் ரீதியாக வென்றெடுப்பதில் நாம் கடந்த காலங்களை விட தற்போது மிகவும் பின் தங்கியே காணப்படுகின்றோம். மர்ஹும் அஷ்ரப் அவர்களின் இழப்பிற்கு பின் முஸ்லிம்களுகாக‌எப்போதும் குரல் கொடுக்க கூடிய ஒரு சிறந்த அரசியல்வாதியை கண்டு கொள்வதில் எமது சமூகம் இன்னும் தடுமாறிக் கொண்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எமது பிரதி நிதித்துவம் எண்ணிக்கையில் அதிகரித்தாலும் சுய நலம், பொறாமை, போட்டி, தலைமைத்துவ ஆசை, பிடிவாதம் போன்ற காரணங்களால் பல பிரிவுகளாகபிரிந்து ஒற்றுமையின்றி மந்தையிலிருந்து பிரிந்து ஒநாய்களிடம் சிக்கிய ஆடுகளை போன்றே எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகளை விடபிரதேசவாதங்களுக்காவும், சுய நலங்களுக்காகவும் இவர்களை ஆதாரிக்கும் நாமே குற்றவாளிகள். முஸ்லிம்கள் மீது அக்கறை, அன்பு கொண்ட சேவை உணர்வுள்ள, இறையச்சம் கொண்டஎந்த அரசியல் வாதிகளும் முஸ்லிம்களிம் பிரதி நிதித்துவத்தை பல கூறுகளாக பிளவு படுத்தி பலவீனமாக்கும் இழியசெயலை செய்யமாட்டார்கள். இன்று அனைத்து முஸ்லிம் அரசியல்கட்சிகளும் தமது கடந்தகால நிகழ்வுகளை மறந்து முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது கட்டாய தேவையாகும். அல்லதுஇவர்களை பகிஷ்கரித்து ஒவ்வொரு முஸ்லிமும் மஸ்ஜிதுகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து பிரதேசவாதம், சுய நலங்களை புரந்தள்ளி ஒரு வலுவான அரசியல் சக்தியைகட்டியெலுப்புவதற்கு முன்வரவேண்டும்.

பேரினவாத கட்சிகள் எமது பிரது நிதித்துவத்தை குறைப்பதற்காக அதிகமாக முஸ்லிம் போட்டியாளர்களை களமிறக்குவதை நாம் காணலாம். இதனூடாக முஸ்லிம்களின் வாக்குகள்சிதறடிக்கப்படுகின்றது. இதற்கு சிறந்த உதாரணம் கொழும்பு, புத்தளம், திருகோணமலை பிரதேசங்களாகும். எமது ஒற்றுமையின்மை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு போன்றபிரதேசங்களில் எமது பிரதிநிதித்துவம் குறைந்துள்ளதை நாம் காணலாம். புத்தளம், குருனாகல் மற்றும் களுத்தறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் எமது பிரதுநிதிகள்தெரிவு செய்யப்படாமை கவலைக்குறிய விடயமாகும். 1989 பாராளுமன்ற தேர்தலில் அபுஸாலி அவர்கள் இரத்தினபுரியில் இருந்து தெரிவு செய்யப்பட்டமையும் மறக்க முடியாத அம்சமாகும்.கண்டி, வன்னி மாவட்டங்களின் கடந்த கால தேர்தல் முடிவுகள் மற்றவர்களுக்கு சிறந்த உதாரண்மாகும். அப்பிரதேசங்களிம் ஒரு சீரான வளர்ச்சியை கடந்த காலங்களில் காண முடிகின்றது.

தற்போது நம் அரசியல் முகம் கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த முறையில் பதிலடி கொடுப்பதற்கு ஒரு பலமான அரசியல் சக்தி எமக்கு அத்தியவசியமானதாகும். முஸ்லிம்ஆகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு நிழலின் கீழ் ஒன்றினைவதனூடாக மாத்திரமே சாத்தியமாகும். சிறு சிறு விடயங்களை அலட்சியம் செய்வதனூடாக பாரிய விளைவுளுக்கு முகம்கொடுக்க வேண்டியது நாமும் எமது வருங்கால சந்ததியினரே ஆகும். மடிந்தது போதும் இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றாய் செயல்படுவோம். எல்லாம் வல்ல இறைவன் உதவிநிச்சயம்.


ஹஸான் மூஸா