Sunday, November 18, 2012

இஸ்லாத்தின் பார்வையில் யூதர்களின் ஆதிக்கம்


உலக சனத்தொகையில் சொற்ப எண்ணிக்கை கொண்டுள்ள யூதர்கள் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவினராக இன்று மாறியுள்ளனர். அதுபோன்று இவர்களது இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளும் ஒரு உச்ச நிலைய எட்டியுள்ளமையை நாம் அனைவரும் அறிவோம். கடந்த சில காலங்களாக இவர்களது அளவு கடந்த அட்டூழியங்களால் அல்லுறும் முஸ்லிம்களின் அவலங்களை சொல்வதற்கு வார்த்தையில்லை. பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என விதிவிலக்கின்றி அனைவரும் கொடூரமான முறையில் கொலை செய்யபடுகின்றனர். கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்து முஸ்லிம்களின் உடமைகளை அழிக்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இஸ்லாமிய விழுமியங்களை தவறான முறையில் சித்தரித்தல் என இவர்களது செயற்பாடுகள் எல்லை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது.


சரி நாம் முஸ்லிம்கள் என்ற ரீதியல் இவ்விடயங்களை எவ்வாறு கையாள்வது

அல்-குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்கையினூடாக முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு மனித குலத்திற்குமான வழிகாட்டல்களை இறைவன் வழங்கியுள்ளான். மேலும் அவற்றை இறைவேதம் என உறுதிப்படுத்துவதற்காக பல சான்றுகளை முன்வைத்துள்ளதுடன்  எமது அத்தாட்சிக்காக இன்னும் பல முன்னறிவிப்புகளையும்  செய்துள்ளான். 

அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்களை அவதானிக்கும் பொழுது, நபிகளார் 1400 வருடங்களுக்கு முன் முன்னறிவிப்பு செய்துள்ள பல விடயங்கள் இன்று எமக்கு சிறந்த சான்றுகளாக மாறிக்கொண்டிருப்பதை காணலாம். 

"யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்தயுத்தத்தின் போது முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன்ஒளிந்திருக்கிறான்என்று பாறைகள் கூறும். " (நூல்: புகாரி 2926)

உலக சனத்தொகையில் அதிக எண்ணிக்கையை கொண்ட கிறிஸ்தவம், ஹிந்து, பௌத்த மதத்தவர்களை விட சொற்ப  அளவிளான  எண்ணிக்கையை கொண்டிருக்கும் யூதர்களது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தலையோங்கியிருப்பதை காணலாம். இதற்கு ஏனையவர்களது ஒத்துழைப்பு இருப்பினும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான ஒரு போராட்டமாகவே இது கருதப்படுகின்றது.

நபிகளாரால் முன்னறிவிப்பு செய்யபட்ட மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ் ஐ அவதானிக்கும் பொழுது, சனத்தொகையில் மிகவும் பலவீனமானதொரு சமுதாயம் இன்று மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பது வியப்பாக இருந்தாலும், இன்றைய கால கட்டத்தில் இது இஸ்லாத்திற்கு சான்று பகிரும் மிக முக்கியமானதொரு அம்சமாக கருதப்படுகின்றது. 

இதற்கு பின்வரும் ஹதீஸ் மற்றுமொரு சிறந்ததொரு சான்றாகும். 

"இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரேவாதத்தையே எடுத்து வைப்பார்கள்." (நூல் : புகாரி 3609, 7121, 6936)


அண்மைகாலமாக சில முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய புரட்ச்சியும், எகிப்து, துருக்கி, ஈரான் போன்ற இஸ்லாமிய வல்லரசுகளின் எழுச்சியும் மேற்குறிய ஹதீஸ்களுக்கு மென்மேலும் வலுசேர்க்கின்றது. எனவே நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் யுத்தத்திற்கான அறிகுறிகளாகவே இவை தெரிகின்றன.

இதனூடாக நாம் எமது ஈமானை வளர்துக்கொள்வது மாத்திரமன்றி, நபிகளாரல் முன்னறிவிப்பு செய்யபட்ட இஸ்லாத்தின் வெற்றியின் பங்காளிகளாக நாமும் மாற முயற்சி செய்ய வேண்டும். 

போலியான தகவல்கள் ஆதாரமின்றி பகிர்ந்து கொள்வதையும், வீண் விதண்டாவாதம், வீண் பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்த்து எமது வெற்றிக்காக களத்தில்  போராடும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் அல்லாஹ்விடம் பிராத்திப்போம். இஸ்லாம் பற்றிய உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான எமது வளங்களையும் அதிகரிப்போம். இதுவே நாம் செய்யும் மிகப்பெரியதொரு பங்களிப்பாகும். 

ஹஸான் மூஸா