Sunday, October 28, 2012

எச்சரிக்கை, புத்திசாலிகளாக நடந்து கொள்ளுங்கள்...

இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பல தவறான கருத்துக்களை சில இனவாதிகள் மிகவும் இழிவான முறையில் முகப்புத்தகத்தின் ஊடாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களது எண்ணம் முஸ்லிம்களை தூண்டிவிடுவதன் மூலம், நாட்டில் மீண்டுமொரு அமைதியற்ற நிலைமையை உருவாக்குவதே ஆகும்.

இனவாத பதிவுகளில் எமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் ஊடாக அவர்களது கருத்துக்களும், பக்கங்களும் பிரபல்யம் அடைவதற்கு நாமே காரணாமாக அமைகின்றோம்.
அத்தியவசியமான தருணங்களில் மாத்திரம் முன்மாதியான முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முற்றிலும் தவிர்ந்து கொள்வது சிறந்தது.

பிரயோசனமற்ற முறையில் வீண் தர்க்கம் செய்து, காலத்தை விரயம் செய்வதை விட மாற்றீடான முயற்சிகளை மேற்கொள்வதே எமது உண்மையான வெற்றி.

"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்." (6 : 108)

இஸ்லாம் பற்றிய தகவல்களை சிங்கள மொழியில் அதிகமாக இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய முயற்சியுங்கள். இஸ்லாம் பற்றிய தூய விளக்கங்களை அனைவரிடமும் கொண்டு செல்வதே எமது உண்மையான வெற்றியாகும்.

சிந்தியுங்கள், அல்லாஹ்வின் பாதையில் செயற்படுங்கள்.. !

ஹஸான் மூஸா