Sunday, April 15, 2012

கவலை, கோபம் மனிதனுக்கு ஆரோக்கியமானதா...?.


அற்பமான விடயங்களுக்காக துயரம் கொள்வதாலும் அலட்டிக் கொள்வதாளும்நாமே எமது ஆளுமைகளை குறைத்துக் கொள்கின்றோம். நீங்கள் சிந்திப்பதுபுரிகின்றது என்ன சொல்ல வருகின்றேன் என்பது புரியவில்லையா????

சரி சுற்றி வளைக்காமல் விடயத்துக்கு வருகின்றேன். மனிதன் தன்னைஅதிகமாக வறுத்திக்கொள்வது எதனூடாக???? கவலை, கோபம், பதற்றம், மனிதசக்திக்கு எதிர்மாரான சிந்தனைகள் ஊடாக மனிதன் தன்னையே அறியாமல்தன்மீது சில அழுத்தங்களை பிரயோகித்துக் கொள்கின்றான். சரி நான் சொல்லவருவது இன்னும் புரியவில்லையா???

மனிதன் தனது உடலில் பலகோடி களங்களை கொண்டுள்ளான் இவை cells எனஅழைக்கப்படுவது உண்டு. அது போன்று மூளையிலும் பல கோடி களங்களைகொண்டுள்ளான் இவை neurons என அழைக்கப்படுகின்றது. சரி இதற்கும்மனிதனது கவலை, கோபம், பதற்றம், பொறாமை, போன்ற மனித சக்திக்குவிரோதமான விடயங்களுக்கும் இடையிலான தொடர்ப்பு என்ன??? இன்று பலநவீன ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்ட ஒரு விடயம், மனிதன் தனது உடலில்கொண்டுள்ள களங்கள் இறக்கும் பொழுது வளர்ச்சியடையக் கூடியன. ஆனால்மூளையில் கொண்ட்டுள்ள neurons எனப்படும் களங்கள் இறக்கும் பொழுதுவளர்சியடையக் கூடியவை அல்ல. மனிதன் தனது மூளையில் 3000 கோடிகளங்களை கொண்டுள்ளான். இந்த neurons எனப்படும் வளர்ச்சியடையாதகளங்கள் எவ்வாறு இறகின்றன???? இதற்கான பதில் மிகவும் பயங்கரமானதுநாம் அலட்சியமாக கருதும் சிறிய விடயங்களே எமது பெரிய எதிரிகளாய்முன்நிற்கின்றன.

ஒரு மனிதன் கோபம், கவலை, பொறாமை, போன்ற மனித சக்திக்கு மாறானவிடயங்களில் தனது மூளையை உபயோகிகும் பொழுது neurons களங்கள்அழிக்கப்படுகின்றன. இதன் விளைகள் எவ்வாறானது எனில் காலப்போக்கில்களங்கள் அழிந்து பைத்தியம், மறதி, மந்தபுத்தி போன்ற பாரதூரமானவிளைவுகளை மனிதனில் ஏற்படுத்தக் கூடியது.

நீங்களே சிந்த்திது பாருங்கள் தற்போது இது போன்ற அற்ப விடயங்களால்நீங்கள் எத்தனை neurons ளை இழந்துள்ளீர்கள்??? நீங்களே உங்கள் எதிரியா???

மனிதனது இந்த கவலை, பொறாமை, கோபம் போன்றமைக்கானகாரணங்களை நோக்குகின்றது போது மிகவும் அற்பமானதாககாணப்படுகின்றது. சிறு சிறு விடயங்கள் என என்னிக்கொண்டு நாமே எமக்குபாரியதொரு அளிவை ஏற்படுத்திக் கொண்டிருகின்றோம். எமதுசெயற்பாடுகளில் மிகவும் அவதானமாக நடந்து கொள்வதனூடாக எமதுதிறன்களை இறப்புவரை பலப்படுத்திக் கொள்ளளாம்.

ஹஸான் மூஸா.

No comments:

Post a Comment